மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் உடல்நலம் சரியில்லையாம்.
மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்தார். மகளுடன் நேரம் செலவிட அவர் படங்களில் நடிக்காமல் விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது ஆராத்யாவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்துவிட்டதால் ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.
அவர் தற்போது ஜஸ்பா படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார். குழந்தையையும் கவனித்துக் கொண்டு படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே கபடி லீக் போட்டிகளில் விளையாடும் கணவர் அபிஷேக் பச்சனின் அணியை ஊக்குவிக்க ஸ்டேடியத்திற்கு செல்கிறார்.
இப்படி அலைந்து கொண்டே இருப்பதால் ஐஸ்வர்யா ராயின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து அவரின் மகள் ஆராத்யாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் விரைவில் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
Post a Comment