டிவி தொகுப்பாளர்கள் சினிமாவில் நடிக்கத்தான் வரவேண்டுமா? எழுத்தாளர்களாகவும் ஜொலிக்க முடியும் என்று கூறியுள்ளார் சன் மியுசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி வைஷ்ணவி.
சன் மியூசிக் சேனலின் மாமீஸ் டே அவுட் என்ற நிகழ்ச்சி பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி வைஷ்ணவிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மாமி போல மடிசார் கட்டிக்கொண்டு இவர் பண்ணும் அதகள அலப்பறைக்காவே நிகழ்ச்சி ஹிட் அடிக்கிறது.
பொதுவாகவே தொகுப்பாளினிகளின் ஆசை சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் வைஷ்ணவியோ எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஆங்கில நாவல் ஒன்றை எழுதி முடித்துள்ள அவர் விரைவில் வெளியிட இருக்கிறாராம்.
நைய்போ குவின் என்பதுதான் நாவலின் தலைப்பாம். மார்க்கெட் படித்த இந்த வைஷூ மாமி... டார்கெட்டுக்குப் பயந்தோ டிவி தொகுப்பாளினி ஆகிவிட்டாராம்.
சிறு வயதில் இருந்தே சிறு கதைகள் எழுதி வந்த வைஷ்ணவி தற்போது முழு நாவலை எழுதி முடித்திருக்கிறாராம்.
வயதான பெண்ணுக்கும், இளைஞனுக்குமான நட்பும் அன்பும்தான் கதையாம். டிவி தொகுப்பாளினியாக இருப்பதை விட ஒரு எழுத்தாளராகவே அடையாளம் காணப்படவேண்டும் என்பதுதான் வைஷ்ணவியின் ஆசையாம்.
Post a Comment