குற்றம் கடிதல், காக்கா முட்டை ஆகிய படங்களைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது தைவான் அரசு.
படம் வெளியாவதற்கு முன்பே தேசிய விருது பெற்ற படங்கள் ‘காக்கா முட்டை' மற்றும் ‘குற்றம் கடிதல்'.
காக்கா முட்டை படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தேசிய விருதை தவிர பல விருதுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு படங்களும் தைவான் திரைப்பட விழாவில் ஒளிபரப்படவுள்ளன. இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தைவான் திரைப்பட விழாவின் தூதர் சங் குவாங் டியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘தைவான் அரசு சிறந்த படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளை வழங்கி கவுரப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தமிழில் ‘குற்றம் கடிதல்', ‘காக்கா முட்டை' படங்களை தேர்வு செய்திருக்கிறோம். மேலும் பிற மொழிகளில் வெளியான சிறந்த படங்களையும் தேர்வு செய்திருக்கிறோம். தைவானில் படப்பிடிப்பு நடத்த தைவான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது,'' என்றார்.
Post a Comment