சென்னை: நடிக்க வந்து 4 வருடங்களில் ஹீரோ ஆகிவிட்டார் காமெடியன் கருணாகரன், கலகலப்பு படத்தில் அறிமுகமான கருணாகரன் தொடர்ந்து நடித்த சூது கவ்வும் படத்தின் மூலமாக ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தார்.
பெரிய கண்கள்+ அப்பாவியான ஒரு முகம் இந்த இரண்டின் மூலம் தமிழ் சினிமாவில் மடமடவென்று முன்னேறி வருகிறார் கருணாகரன், ஆடாம ஜெயிச்சோமடா மற்றும் உப்புக் கருவாடு படங்களைத் தொடர்ந்து தற்போது கண்ணீர் அஞ்சலி படத்தில் நாயகனாக களமிறங்கி இருக்கிறார்.
3 வருடம் முடிவதற்குள்ளேயே 25 படங்களில் நடித்து முடித்து விட்ட கருணாகரன், தொடர்ந்து நடிக்க முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இயக்குநர் குகன் இயக்கி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் அஞ்சலி திரைப்படத்தில் கருணாகரனுடன் இணைந்து நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். குறுகிய கால தயாரிப்பாக வளர்ந்து வருகிறது கண்ணீர் அஞ்சலி.
Post a Comment