சென்னை: இயக்குநர் செல்வராகவன் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்துக் கொடுக்காவிடில், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராக ஆசைப்பட்டு எடுத்த மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் இதோ, அதோ என்று இழுத்துக் கொண்டே செல்கிறது. முதல் சில நாட்கள் இந்தப் படத்தை ஆர்வமாக இயக்கிய செல்வராகவன் பின்பு அதனை மனைவியிடம் விட்டுவிட்டு வேறு படங்களுக்குச் சென்று விட்டார்.
செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி படவேலைகளில் பிஸியாக இருக்கிறார் என்று அனைவரும் கூறினாலும், படம் ஒரு இன்ச் கூட முன்னேறவில்லை. மீண்டும் மீண்டும் இயக்குநர் செல்வராகவனிடம் கோலா பாஸ்கர் முறையிட்டும் செல்வராகவன் எந்தப் பதிலும் கூறவில்லையாம்.
பொறுத்துப் பார்த்த கோலா பாஸ்கர் தற்போது கொக்க கோலா ரேஞ்சுக்கு பொங்கி எழுந்துவிட்டார், என் படத்தை முடித்துக் கொடுக்காவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூற விஷயம் செல்வராகவன் காதுகளைச் சென்றடைய மனிதர் ஆடிப் போய்விட்டார்.
சிம்புவை வைத்து கான் படத்தை இயக்கி வந்தவர் தற்போது அந்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு, மாலை நேரத்து மயக்கத்தைக் கையில் எடுக்கவிருக்கிறாராம்.
மாலை நேரத்து மயக்கம் முடிந்ததும் தான் அடுத்த வேலைகளில் ஈடுபட இருக்கிறாராம் செல்வராகவன். இந்தக் கோலா பாஸ்கர் வேறு யாருமில்லை செல்வராகவன் படங்களுக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர்.
அதுமட்டுமின்றி தனது சொந்த மகனை (பாலகிருஷ்ண கோலா) கதாநாயகனாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் மாலை நேரத்து மயக்கம் படத்தை சொந்தமாகத் தயாரித்து இருக்கிறார்.
இருவருக்கும் இடையே பிரச்சினை முற்றியதில் கான் படத்துக்கு வேறு ஒருவரைப் படத்தொகுப்பாளர் ஆக்கியிவிட்டார் செல்வராகவன்.
ஒன்னு மட்டும் புரியல, அது எப்படி சிம்பு படத்துக்கு மட்டும் இந்த மாதிரிப் பிரச்சினை எல்லாம் வருது...!
Post a Comment