ஒரு வாரம் கழித்து எனது மாரி படம் வெளியாவதால், பாகுபலியின் தாக்கம் மாரிக்கு இருக்காது என்றார் நடிகர் தனுஷ்.
மாரி படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. அதையொட்டி இன்று படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் படத்தின் நாயகன் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை என்னிடம் கொடுத்தார் இயக்குநர் பாலாஜி மோகன். எனக்கு ரொம்பப் பிடித்த கதை. மாஸ் மசாலா படம் இது. இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகனுக்கு கமர்ஷியல் பட வாய்ப்புகள்தான் நிறைய வரும். படத்தின் டீசருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அந்த டீசரின் விரிவாக்கம்தான் மாரி.
இந்தப் படம் சோலோவாக ரிலீசாவது சந்தோஷம். இது தானாக அமைந்தது. இன்னொன்று ரிலீஸ் தேதியை மூன்றரை மாதங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்.
பாகுபலி படத்தால் மாரி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தப் படம் ஒரு வாரம் முன்பே வெளியாகிவிட்டது. என் படம் இப்போதுதான் வருகிறது. எனவே வசூல் பாதிக்காது," என்றார்.
Post a Comment