பாகுபலி படத்தை இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ஆரம்பிக்கும்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணமே இல்லை.
படத்தை எடுத்து முடித்துப் பார்த்தபோது கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேல் போவது தெரிந்ததும்தான் இதனை இரண்டு பாகமாக்க முடிவெடுத்து கடந்த ஆண்டு அறிவித்தனர்.
இந்த முதல் பாகத்திலேயே வரவேண்டிய பல சுவாரஸ்யமான பகுதிகளை, கிட்டத்தட்ட 40 சதவீத காட்சிகளை இரண்டாம் பாகத்துக்காக எடுத்து வைத்துவிட்டுத்தான் முதல் பாகத்தை வெளியிட்டனர். படமும் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுவிட்டது.
இப்போது பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளை ராஜமவுலி ஆரம்பிக்கவிருக்கிறார்.
இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு பிரமாண்ட போரைக் காட்டப் போகிறார்கள். அது முதல் பாகத்தில் பார்த்ததைவிட மிக வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறாராம் ராஜமவுலி. முதல் பாகத்தில் காலகேயர்கள் என்ற முரட்டுப் படையுடன் மோதினார்கள் பிரபாஸும் ராணாவும்.
இந்த இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு படையுடன் மோதல். அதில் மன்னன் மகேந்திர பாகுபலி கொல்லப்படுதல் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன.
மேலும் இந்த இரண்டாம் பாகத்தில் முழுக்க அனுஷ்காவின் ஆதிக்கம்தான் அதிகமிருக்கும் என ராஜமவுலியே தெரிவித்திருக்கிறார். தமன்னாவும் வருவார், ஆனால் சில காட்சிகள்தான் அவர் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் பாக படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. அனுஷ்கா, ராணா, தமன்னா ஆகியோர் அவரவர் படங்களை முடித்து வர அவகாசம் தரவே இரண்டாம் பாகத்தை செப்டம்பரில் ஆரம்பிக்கிறார் ராஜமவுலி.
Post a Comment