ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு வில்லன் ஜேடி சக்கரவர்த்தி?

|

கொஞ்சம் சைக்கோத்தனமான முகம், ஆனால் சாதுவான உடல் மொழி, வில்லத்தனமான பார்வை.. இவைதான் ஜேடி சக்கரவர்த்தி.

ராம்கோபால் வர்மாவின் உதயம் படத்தில் 1989-ல் அறிமுகமானவர் சக்ரவர்த்தி. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஏழு படங்களை இயக்கியுள்ளார். மூன்று படங்களைத் தயாரித்துள்ளார்.

Is JD Chakravarthy Rajini's villain?

தமிழில் பிரதாப், சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி உள்பட 9 படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த ‘அரிமா நம்பி' படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அஸ்வின் கக்குமனு நடிக்கும் ‘ஜீரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எந்திரன் படத்திலேயே ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருந்தார் சக்கரவர்த்தி. கடைசி நிமிடத்தில் அது மாறியது.

இப்போது ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் சக்கரவர்த்திதான் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் இவரை ரஞ்சித் சார்பில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ஏற்கெனவே இப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப் படம், நடிப்பவர்கள் குறித்து முழு விவரம் வந்துவிடும் எனத் தெரிகிறது.

 

Post a Comment