ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘சகலகலா வல்லவன் - அப்பாடக்கர் இசை இன்று வெளியானது.
முதலில் இப்படத்திற்கு ‘அப்பாடக்கர்' என்றுதான் பெயர் வைத்திருந்தனர். தற்போது, ‘சகலகலா வல்லவன்' என்று மாற்றியுள்ளனர். கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த படத்தின் தலைப்பு இது. ஏவிஎம் நிறுவனத்தின் அனுமதியோடு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மருதமலை, படிக்காதவன் படங்களை இயக்கிய சுராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் பிரபல பண்பலை வானொலியில் இன்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, இயக்குநர் சுராஜ், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்' பட பாடல்களைப் போல சகலகலா வல்லவன் பட பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Post a Comment