கமல் ஹாஸனையும் மோகன்லாலையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் இயக்குநர் ஜீது ஜோசப்.
மோகன்லால் - மீனா நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம், தமிழில் கமல் - கவுதமி நடிக்க பாபநாசம் என ரீமேக் ஆகி வெளியாகியுள்ளது.
படத்தை பெரும்பாலானோர் பாராட்டினாலும், மோகன் லால் - மீனா நடிப்பை, கமல் - கவுதமி நடிப்போடு ஒப்பிட்டு பேசினர், எழுதினர்.
குறிப்பாக சமூக வலைத் தளங்களில் இந்த மாதிரி ஒப்பீடு அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இரு படங்களையும் இயக்கிய ஜீது ஜோசப்பிடம் கேட்டோம். அதற்கு அவர் பதிலளிக்கையில், "இருவருமே பெரும் கலைஞர்கள். ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.
நடிப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. மோகன்லாலும் கமலும் அவரவர் பாணியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். மீனாவின் பாத்திரத்தில் கவுதமியை நடிக்க் கேட்டது நான்தான். அவர் நடித்தது அந்தப் பாத்திரத்துக்கு வேறு வண்ணத்தைத் தந்தது," என்றார்.
Post a Comment