'பேஸ்புக் - ஸ்டேடஸ போடு சாட் பண்ணு'... இதுவும் படத்தோட தலைப்புதாங்கோ!

|

விஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் பெருகப் பெருக வில்லங்கங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

தகவல் பரிமாற்றத்தின் அடுத்த பரிமாணமாக வந்தது இணையதளம் என்றால், அந்த இணைய தள உலகில் புதிய புரட்சியையே ஏற்படுத்தியது பேஸ்புக்.

ஆனால் அதே பேஸ்புக் இன்று பலரது வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. பலரது எதிர்காலத்தைக் கேள்விக்குறியதாக்கியுள்ளது.

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

ஹீரோவாகப் பார்க்கப்பட்ட அதே பேஸ்புக், இன்று வில்லனாகவும் பார்க்கப்படும் நிலை. இதை மையப்படுத்தி ஒரு சினிமாவை தமிழில் உருவாக்குகிறார்கள்.

படத்தின் தலைப்பு: பேஸ்புக் - ஸ்டேடஸ போடு சாட் பண்ணு!

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

பேஸ்புக்கில் புரொபைல் படத்தை மாற்றி வைத்துக் கொண்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி திருப்பங்கள்தான் கதை.

இந்தப் படத்தில் ரகுமான் நாயகனாக நடிக்க, புதுமுகம் சுர்ஸ் சர்மா, அதிதி ஆச்சார்யா மற்றும் ஸ்ருதி ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சாம்ஸ், சுவாமிநாதன் போன்றவர்களும் நடிக்கிறார்கள்.

FB-Statushae Podu Chat Pannu - A new movie on Facebook

ஆர் செந்தில் நாதன் இயக்கும் இந்தப் படத்துக்கு சரவண பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ் பிரேம் குமார் இசையமைக்கிறார்.

ஆர் செல்வம் தனது எஸ்எஸ்விஎஸ் எஸ்எஸ்கே புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.

 

Post a Comment