சென்னை: ஆர்யா - சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, படத்தின் டீசர் மற்றும் பட வெளியீட்டுத் தேதிகளை முறைப்படி படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
இயக்குநர் ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடித்து இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
#VSOP #cuttingteaser from july 10th 6pm onwards....cheers,,, pic.twitter.com/I42UJ4A3ba
— Rajesh M (@rajeshmdirector) July 8, 2015 இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை நாளை (ஜூலை 10) வெளியிட இருக்கின்றனர், மேலும் வருகின்ற ஜூலை 18 படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலையும் படப்பிடிப்புக் குழுவினர் வெளியிடுகின்றனர்.
பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆர்யா- ராஜேஷ்- சந்தானம் இம்மூவரும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக உள்ளது.
ஆர்யாவின் 25 வது படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகின்றது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை டீசர் பூர்த்தி செய்யுமா? என்று பார்க்கலாம்....
Post a Comment