பாகுபலி படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் பிரமிப்புடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம் எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி. 3 டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாராகியுள்ளது. இந்தி, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நான்கு மொழிகளிலும் வரும் ஜூலை 10ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது. 4000 அரங்குகளுக்கு மேல் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் படம் இதுவே.
இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கை குழுவினர், பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்தார்களாம்.
சிறப்பம்சங்கள் மிக்க பாகுபலி படத்தை தணிக்கை செய்ததில் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், பாகுபலி பட தணிக்கை சான்றிதழில் தங்களின் பெயர் இடம்பெறுவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனராம்.
கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரின் நிறுவனத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் வாழ்த்தியுள்ளனர் (தணிக்கைக் குழு இப்படியெல்லாம் கூடவா பாராட்டுகிறது?!).
ஏற்கெனவே இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்போது தணிக்கைக் குழுவினர் இந்த அளவுக்குப் பாராட்டு தெரிவித்திருப்பது அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைப்பதாக உள்ளது.
Post a Comment