சென்னை: குறும்பட இயக்குநர்களுக்கு உதவும்வகையில், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
இதுகுறித்து அவர் தரப்பு வெளியிட்ட அறிக்கை: டென் என்டர்டெயின்மென்ட் பேனர் பெயரில், யூடியூப் சேனல் துவக்கி, குறும்படங்களை அதில் வெளியிட முடிவு செய்துள்ளோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், தயாரிக்கப்படும் குறும்படங்கள் இதில் வெளியிடப்படும். முதல்முறையாக டென் என்டர்டெயின்மென்ட்தான் இப்படி ஒரு முன் முயற்சியை எடுத்துள்ளது.
முதலில் தென் மாநில மொழி படங்களை வெளியிட்ட பிறகு படிப்படியாக பிற மொழி குறுமொழி படங்களும் யூடியூப்பில் வெளியிடப்படும். திறமையாளர்களை உலகத்திற்கு வெளிக்காட்ட இம்முயற்சி எடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் டிஜிட்டர் கூட்டாளியான டிவோ ஆகியவற்றின் சமூக வலைத்தள ஆதிக்கத்தை இந்த குறும்பட விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.
Post a Comment