சகலகலா வல்லவன் ஆனது ஜெயம் ரவியின் அப்பாடக்கர்!

|

சகலகலா வல்லவன்.. தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்குப் படம். கமல் ஹாஸன் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு புதிய படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்துள்ள அப்பாடக்கர் படத்துக்குதான் இந்தத் தலைப்பைச் சூட்டியுள்ளார்கள்.

இந்தப் படத்தை தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கியுள்ளார்.

Appatakkar title changed now as Sagalakala Vallavan

காமெடி ஸ்பெஷலிஸ்டான சுராஜ், இந்தப் படத்தில் விவேக்கையும் சூரியையும் இணைத்து காமெடி செய்ய வைத்துள்ளார். தமன் இசையமைக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பழைய சகலகலா வல்லவன் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பை அப்பாடக்கர் படத்துக்குச் சூட்டியுள்ளனர்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே முரளிதரன், கே சுவாமிநாதன், கே வேணுகோபால் தயாரித்துள்ளனர். விரைவில் திரைக்கு வருகிறது அப்பாடக்.. ஸாரி.. சகலகலா வல்லவன்!

 

Post a Comment