சுதந்திர தினத்தன்று வெளியாகும் மூன்றாம் உலகப்போர்

|

சென்னை: தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆகிடாதிங்க...மூன்றாம் உலகப் போர் என்பது படத்தோட தலைப்புதான், தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு படம் முழுவதும் போரைப் பற்றி எடுத்திருக்கிறார் இயக்குநர் சுகன் கார்த்தி.

பாலை படத்தில் நடித்த சுனில் குமார் நாயகனாகவும், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படப்புகழ் அகிலா கிஷோர் நாயகியாகவும் நடித்து இருக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் படம் முழுவதுமே யுத்த களத்தில் நடப்பது போன்று காட்சிகள் இருப்பதாலாம்.

Moondram Ulaga Por - Movie

படத்தின் கதை இதுதான் 2025 ம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு சின்ன பிரச்சினையில் யுத்தம் மூளுகிறது, இந்த யுத்தம் பெரிதானால் மூன்றாம் உலகப் போர் வரும் அபாயம் உண்டு.

இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ராணுவவீரன் இந்த யுத்தம் வராமல் எப்படித் தடுக்கிறான் என்பதே படத்தின் கதையாம். சென்சார் போர்டில் யூ சான்றிதழ் பெற்றிருக்கும் மூன்றாம் உலகப் போர் வரும் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

 

Post a Comment