எனக்கு உங்க அளவுக்கு ஆட வராது... பாட வராது... நான் நடுவராக வந்து மார்க் போட உட்கார்ந்திருக்கேன் என்று அதீத தன்னடக்கத்தோடு பேசியது வேறு யாருமல்ல நடிப்போ, தயாரிப்போ, பாட்டோ ஒவ்வொன்றிலும் சொல்லியடிக்கும் தனுஷ்தான்.
துள்ளுவதோ இளமை தொடங்கி அனேகன் வரை எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், பாடலாசிரியராக, தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.
சில நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் உள்ள தனுஷ், சில தினங்களுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 7 அப் நடனப் போட்டி நிகழ்ச்சியின் சிறப்பு நடுவராகவும் பங்கேற்றார். தனுஷ் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரும் வந்திருந்து போட்டியாளர்களின் நடனத்திற்கு மதிப்பெண் வழங்கியதோடு எந்த குறையும் சொல்லாமல் பாராட்டி தள்ளினார்கள்.
சினிமாவில் நடித்து வந்த அமலாபால், திருமணத்திற்குப் பின்னர் முதன் முறையாக சின்னத்திரைக்கு நடுவராக வந்த நிகழ்ச்சி இது. கடந்த எபிசோடுகள் வரை போட்டியாளர்களுடன் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார். இது இறுதிச்சுற்று என்பதால் போட்டியாளர்களை ஆடவிட்டு வெறும் மதிப்பெண்கள் மட்டுமே போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அமலாபால்.
போட்டியாளர்கள் நடனமாடி முடித்த உடன், எப்படி இருந்தது டான்ஸ் சொல்லுங்க என்று தொகுப்பாளர் தீபக் கேட்க, அதற்கு தனுஷ், எனக்கு சரியா டான்ஸ் வராது, பாடவும் தெரியாது, ஆனா இங்க வந்திருக்கிற போட்டியாளர்கள் எல்லாரும் நன்றாக பாடி ஆடுகின்றனர் என்று புகழ்ந்து தள்ளினார். போட்டி முடிந்த உடன் பங்கேற்பாளர்களுக்கு பரிசு கொடுத்து விட்டு அமைதியாகவே கிளம்பினார்கள் சிறப்பு நடுவார்கள்.
Post a Comment