ஹைதராபாத்: தெலுங்கு உலகின் இளவரசன் என்று கொண்டாடப்படும் நடிகர் மகேஷ்பாபு, இளவரசர் மட்டுமல்லாது வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்பவர். அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ஸ்ரீமந்துடு.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது, ஆனால் வழக்கத்திற்கு மாறாக சைக்கிளில் அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு மகேஷ்பாபு நடித்திருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதைக் கண்டு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். இதுதான் சாக்கு என்று சக நடிகர்களின் ரசிகர்கள் மகேஷ் பாபுவைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் இஷ்டத்திற்கு மீம்ஸ் கிரியேட் செய்து மகிழ்ந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது, அதைக் கேட்ட எல்லோருமே ஆடிப் போய்விட்டனர். ஸ்ரீமந்துடு படத்தில் மகேஷ்பாபு ஓட்டிய சைக்கிளின் விலை சுமார் மூன்றரை லட்சம் ரூபாயாம்.
கிட்டத்தட்ட ஒரு காரின் விலைக்கு நிகரான இந்த சைக்கிளில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா, இது ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் 20 கியர்கள் இந்த சைக்கிளில் உள்ளன.
இதைத் தவிர மேடு பள்ளங்களில் செல்லும்போது அதற்கு ஏற்றவாறு உயரத்தை சரிபடுத்திக் கொள்ளும் வசதியும் இந்த சைக்கிளில் இருக்கிறது என்று, ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு சைக்கிளைப் பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்குகின்றனர் ஸ்ரீமந்துடு படக்குழுவினர்.
சைக்கிளை ஒழுங்காக ஓட்டவில்லை நீங்கள் கீழே விழவேண்டியதுதான், என்று சற்று பயமுறுத்தவும் செய்கின்றனர் அதுசரி...
Post a Comment