பாபநாசம் படத்தில் ரஜினிதான் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை, என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இன்று வெளியாகியுள்ளது.
ரஜினி லிங்கா படம் நடிக்கும் முன்பே த்ரிஷ்யம் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஜீத்து ஜோசப்பை அழைத்திருந்தார். இருவரும் மீண்டும் படம் பார்த்து, இந்தக் கதையை தமிழில் பண்ணலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் பிறகு அதில் கமல் நடித்தார்.
ஏன் இந்தப் படத்தை ரஜினி பண்ணவில்லை?
ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது, "ரஜினி சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடித்துவிட்டது. மோகன்லால் மாதிரி இவருக்கும் பிரமாதமான பாடிலாங்குவேஜ். ரஜினி அந்தப் பாத்திரத்துக்கு வேறு பரிமாணம் கொடுத்திருப்பார். ஆனால் இரண்டு காட்சிகள் எங்கள் இருவருக்குமே நெருடலாக இருந்தன.
ஒன்று அந்தப் பாத்திரத்தை போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சி. முகத்தில் ஷூவால் மிதிப்பார் ஒரு சாதாரண காவலர். அடுத்து க்ளைமாக்ஸ். இந்த இரண்டையும் ரஜினி ரசிகர்கள் ஏற்பார்களா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ரஜினியும் அதை ஒப்புக் கொண்டார்.
எனவே வேறு ஒரு கதையுடன் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். நிச்சயம் அவரை புதிய கதையோடு சந்திப்பேன்," என்றார்.
+ comments + 1 comments
rajini na style and punch dialogs-nu create pannitanga.. so intha alvu acting ulla nature padam ippo avara nadikruathu kastam.. so ninga risk-la irrunthu thappichirukinga so dont feel..
Post a Comment