சென்னை: கோடம்பாக்கத்திற்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடியாகி விட்டார், ஆமாம் விக்ரம் தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப் படுத்தப் போகிறார். யார் இயக்கத்தில் தெரியுமா இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் புகழப்படுகிற ஷங்கரின் இயக்கத்தில்.
ஷங்கரின் இயக்கத்தில் துருவ்வின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன, விக்ரமை வைத்து ஏற்கனவே அந்நியன் மற்றும் ஐ என 2 மெகாஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.
தற்போது மூன்றாவது முறையாக ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் விக்ரம், ரஜினிக்கு வில்லனாக அமீர்கானை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினாராம் ஷங்கர்.
அமீர்கான் நடிக்க மறுத்ததால் தற்போது விக்ரமுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க இருக்கும் ஷங்கர், 2016 ம் ஆண்டு ஷூட்டிங் செல்லத் தயாராக மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்.
எந்திரன் 2 முடிந்தவுடன் அநேகமாக துருவ்வை வைத்து அவர் இயக்கலாம் என்கிறார்கள், ஏனெனில் ஷங்கரின் இயக்கத்தில் துருவ் நடித்தால் அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார் விக்ரம்.
அதற்காகத் தான் எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம், ஷங்கரும் துருவ்வை வைத்து இயக்க மறைமுகமாக சரி என்று சொல்லியிருக்கிறார் விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.
Post a Comment