தயாரிப்பாளரின் ஹீரோ என்றால் அது விஷால்தான்! - தயாரிப்பாளர் டி சிவா

|

தயாரிப்பாளரின் ஹீரோ என்றால் இன்றைக்கு விஷாலைத்தான் சொல்ல முடியும் என்று தயாரிப்பாளர் டி சிவா பாராட்டினார்.

விஷால் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பாயும் புலி படத்தின் ஒற்றைப் பாடல் வெளியீடு நேற்று நடந்தது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா பேசுகையில், "சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார்.

T Siva and Madhan praised Vishal

தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக்குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்,'' என்றார்.

வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளர் மதன் பேசுகையில், "விஷாலுடன் நாங்கள் இணையும் 4 வது படம் இதுபடம் ஆரம்பித்த முதல்நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர்," என்றார்.

சமீப காலத்தில் தயாரிப்பாளர்களிடமிருந்து இவ்வளவு பாராட்டையும் வாழ்த்தையும் பெற்ற இயக்குநர், ஹீரோ சுசீந்திரனும் விஷாலும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment