ஒரு பொய்யாவது சொல் பெண்ணே.. ஏம்ப்பா இப்படி ஓட்டுறீங்க சிம்புவை!

|

சென்னை: நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான வாலு திரைப்படம் தொடர்ந்து பல வெளியீட்டுத் தேதிகளைப் பார்த்தும் வெளியிட முடியாமல் தடுமாறி வருகின்றது. இந்நிலையில் வரும் ரம்ஜான் தினத்தன்று படம் வெளியாகும் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.

வாலு படத்தின் பாடலை ஷூட் செய்வது, டிரைலர் வெளியிடுவது என்று படக்குழுவினர் பதறியடித்து வேலை செய்ததைப் பார்த்து இந்த முறை வாலு, கண்டிப்பாக வெளியாகும் என்று சிம்பு ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆடிப் பாடினர்.

Vaalu Movie Issue- Face book Post

யார் கண்பட்டதோ மீண்டும் வாலுவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இதனால் உற்சாகத்தில் மிதந்த சிம்புவின் ரசிகர்கள் தற்போது காற்றுப் போன பலூன் போல ஆகிவிட்டனர். இதை வைத்து சமூக வலைதளங்களில் ஓட்ட ஆரம்பித்து விட்டனர். அதில் ஒன்றுதான் இது.

தற்போது சோகத்தில் திரியும் சிம்பு ரசிகர்கள் இந்தப் பாடலைத் தான் பாடித் திரிகின்றனாராம், அப்படி என்ன பாடல் என்று கேட்கிறீர்களா? ஜோடி படத்தில் பிரசாந்த் சிம்ரனைப் பார்த்து ஒரு பொய்யாவது சொல் பெண்ணே உன் காதலன் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர்வாழ்வேன் என்று பாடுவாரே.

அதே பாடலை இப்படி மாற்றிப் பாடியுள்ளனர் அதாவது ஒரு பொய்யாவது சொல் பெண்ணே வாலு ரிலீசாகும் என்று அந்த சொல்லில் நான் உயிர் வாழ்வேன். இப்படி ஒரு போஸ்ட்டை யாரோ ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட தற்போது அதிகமான பேரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த போஸ்ட்.

விடுங்கய்யா. வேற வேலை இருந்தா பாருங்கய்யா...!

 

Post a Comment