இணையத்தில் வைரலாகும் “ காலெண்டர் கேர்ள்ஸ்” டீசர்- மகிழ்ச்சியில் இயக்குநர் மதூர் பந்தர்கர்

|

சென்னை: இந்தி இயக்குனரும் 3 முறை தேசிய விருது பெற்றவருமான மதூர் பந்தர்கர், சமீபத்தில் வெளியிட்ட காலெண்டர் கேர்ள்ஸ் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமல்லாது, நட்சத்திரங்களும் டீசர் நன்றாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மதூர் பந்தர்கர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

5 புதுமுகங்களை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் மதூர். அகன்ஷ்யா புரி, கிரா தத், அவனி மோடி, சதருபா புனே மற்றும் ரூகி சிங் என 5 அழகிகளை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம் காலெண்டர் கேர்ள்ஸ்.

வித்தியாசமான கோணங்கள், மனதைச் சுண்டி இழுக்கக் கூடிய இசை, தெளிவான காட்சிகள் இவற்றுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான 5 அழகிகளும் சேர்ந்து கொண்டதில் இணையத்தில் வைரலாகி வருகிறது டீசர்.

நேற்று வெளியான படத்தின் டீசர் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரம் பேரால் பார்த்து ரசிகப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment