ரஜினிக்கு முதல் 'வாய்ஸ்' கொடுத்தவர் யார் தெரியுமா?

|

தமிழ் சினிமாவில் நடிகராக ரஜினிகாந்த் அறிமுகமானது அபூர்வ ராகங்களில். அது ஒரு சிறிய வேடம்தான். அதன் பிறகு வந்த இரு படங்களிலும் கூட அவருக்கு பாடல் காட்சிகள் கிடையாது.

அப்போதெல்லாம் திரையில் பாடும் நட்சத்திரத்துக்குத்தான் நாயகன் அந்தஸ்து. ஆனால் ரஜினியோ தொடர்ந்து வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்தார்.

MS Viswanathan gives voice to Rajinikanth

பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார் ரஜினி. அதில் கமலுக்கு கவுரவ வேடம்.

அந்தப் படத்தில் ஒரு பாடகராக அவருக்கு முதலில் குரல் தந்தவர் எம்எஸ் விஸ்வநாதன்தான். படகிலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கும் கமல் ஹாஸனை கண்டுகொள்ளாமல், படகை வேகமாக செலுத்தியபடி 'மணவினைகள் யாருடனோ.. மாயவனின் விதிவகைகள்' என்று பாடும் ரஜினிக்கு குரல் தந்தவர் எம்எஸ் விஸ்வநாதன்தான்.

அதன் பிறகு புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் ரஜினிக்கு பாடல் காட்சிகள் வைத்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியும் கமலும் கடைசியாக இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற சம்போ சிவ சம்போ... பாடல் ரஜினிக்கு பெரும் திருப்பு முனையாகவும், ஏராளமான ரசிகர்களைப் பெறவும் உதவியது. இந்தப் பாடலையும் எம்எஸ்விதான் பாடினார். பின்னர் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம்பெற்ற சிந்து நதிப் பூவே என்ற பாடலிலும் ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார் எம்எஸ்வி.

MS Viswanathan gives voice to Rajinikanth

பல மேடைகளில் இதனை நன்றியுடன் நினைவு கூறுவார் ரஜினிகாந்த்.

ரஜினியின் ஆரம்பப் படங்கள் பலவற்றுக்கு இசை எம்எஸ்விதான். தப்புத் தாளங்கள், பில்லா, பொல்லாதவன், போக்கிரி ராஜா, சிவப்புச் சூரியன் போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்திருக்கிறார் எம்எஸ்வி. குறிப்பாக நானே என்றும் ராஜா, நான் பொல்லாதவன், மை நேம் ஈஸ் பில்லா.. போன்ற மாஸ் பாடல்களை ரஜினிக்கு உருவாக்கியது எம்எஸ்வி - கண்ணதாசன் கூட்டணிதான்.

 

Post a Comment