ரன்வீர்- தீபிகா- பிரியங்கா நடிப்பில் உருவான பஜ்ரோ மஸ்தானி டீசர் வெளியானது

|

மும்பை: இந்தித் திரையுலகில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் பஜ்ரோ மஸ்தானி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இன்று வெளியாகி இருக்கும் டீசர் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர், மேலும் #BajiraoMastaniTeaser என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டடிக்க வைத்து இருக்கின்றனர் ரசிகர்கள்.

வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் காதலுக்கும் முக்கியமான இடத்தை இயக்குநர் வைத்திருக்கிறாராம். மராத்திய பீஷ்வா பாஜிரோவுக்கும் அவரது 2 வது மனைவியான மஸ்தானிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பாஜிரோவாக ரன்வீரும், அவரது இரண்டாவது மனைவியாக தீபிகாவும் நடித்திருக்கின்றனர். ரன்வீரின் முதல் மனைவியாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார்.

'Bajirao Mastani' Teaser Released

படம் 70% முடிவடைந்து விட்டது, என்று படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியிருக்கிறார். வரும் டிசம்பர் மாத இறுதியில் (18) பஜ்ரோ மஸ்தானி திரைப்படம் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

பஜ்ரோ மஸ்தானியின் டீசரைப் பார்த்தவர்கள் படம் ஜோதா அக்பரை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்கள். படம் ஜோதா அக்பரைப் போல இருக்கிறதா இல்லை அதைவிடவும் சிறப்பாக இருக்கப்போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Post a Comment