உதைன்னா உதை... இது கவுண்டமணி உதை!

|

எவர்கிரீன் காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தின் ஷூட்டிங் படுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்துக்காக கவுண்டமணி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் மதுரையில் நடந்தது.

Goundamani in Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

மதுரையில் பரபரப்பான மாட்டுதாவணி, தெப்பக்குளம் நத்தம் ரோடு போன்ற நடந்த இந்த சண்டைக் காட்சியை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் படமாக்கினார்.

3 நாட்கள் கொஞ்சமும் களைப்பின்றி அதிரடி சண்டை காட்சியில் நடித்துள்ளார் கவுண்டமணி. மிகவும் சிறப்பாக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கவுண்டரிடம் அடிவாங்கும் காட்சியில் நடித்த ஸ்டன்ட் கலைஞர்கள்.. கவுண்டரின் வேகம் இந்த வயதிலும் ஆச்சர்யப்படுத்துவதாகக் கூறினர்.

Goundamani in Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

இந்தப் படத்தில் கவுண்டமணி ஜோடியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, சௌந்தரராஜா, சதுரங்கவேட்டை வளவன், ஜிகிர்தண்டா ராமச்சந்திரன் மற்றும் பின்னணி பாடகர் வேல்முருகன், ஒளிப்பதிவாளர் டீ.கண்ணன், வாசகன் போன்றோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுசிந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

 

Post a Comment