சென்னை: தமிழில் தற்போது ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், எந்த விஷயத்தில் என்று கேட்கிறீர்களா எல்லாம் சம்பள விஷயத்தில் தான். அட்லீயின் புதிய படத்திற்காக நடிகர் விஜய் சம்பளம் சுமார் 30 கோடிகளாம்.
புலி படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் புதிய படத்திற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தத் தொகையை விஜய்க்கு வாரி வழங்கி இருக்கிறார். அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுப்பது, கத்தி படம் 100 கோடி வசூலித்தது எல்லாம் சேர்ந்து விஜயின் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறது.
தற்போது தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் (எந்திரன் படத்தில் 40 கோடிகளுக்கும் அதிகமாக வாங்கினார் என்று கேள்வி) , சம்பள விஷயத்தில் அவருக்கு அடுத்த இடத்தை விஜய் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் 59 படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது, இதில் விஜயின் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என 2 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
தற்போது விஜய் நடித்து வெளிவர இருக்கும் புலி திரைப்படம் விஜய் படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment