ஹைதராபாத்: இந்தியா முழுவதும் பாகுபலி ஜுரமாக உள்ள நிலையில், பாகுபலி படத்தில், நடித்த தமன்னா நடிகர் பிரபாசை டார்லிங் பிரபாஸ் என வர்ணித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸின் காதலியாகவும், போராளியாகவும் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடிகை தமன்னா.
பாகுபலி படத்தில் சிறிது நேரமே இடம்பெற்றாலும் கூட பிரபாஸ்- தமன்னா இடையிலான கெமிஸ்ட்ரி பலரின் பாராட்டுகளையும் தமன்னாவுக்கு, பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கின் உண்மையான டார்லிங் பிரபாஸ் வீட்டில் இருந்து வந்த சுவையான உணவை, தவற விட்டது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Post a Comment