ஹைதராபாத்: இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக பாகுபலி திரைப்படத்தின் மூலம் உருவெடுத்திருக்கும் இயக்குநர் ராஜமௌலிக்கு ஜூலை மாதத்தின் மீது அப்படி என்ன காதலோ தெரியவில்லை.
அவரின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் தொடங்கி தற்போதைய பாகுபலி வரை பெரும்பான்மையான திரைப்படங்கள் ஜூலை மாதத்தில் தான் வெளியாகி உள்ளன. ராஜமௌலியின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நம்பர் 1 ஜூலை மாதத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
தொடர்ந்து மகதீரா, நான் ஈ போன்ற வெற்றிப் படங்களும் ஜூலை மாதத்தில் தான் வெளியானது, தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பாகுபலி திரைப்படமும் ஜூலை மாதத்தில் தான் வெளியாகியது.
எனவே சென்டிமெண்டாக பாகுபலி படத்தின் 2 வது பாகத்தையும் 2016 ஜூலை மாதத்தில் தான் வெளியிட இருக்கிறாராம் ராஜமௌலி. இந்தியில் பாகுபலி படத்தை வாங்கி பிரபலப்படுத்திய கரண் ஜோகரும் ஜூலை மாதமே படத்தை வெளியிடுங்கள் என்று ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறாராம்.
படம் பாதிக்கு மேல் முடிந்து விட்டது இன்னும் 100 நாட்கள் ஷூட்டிங் சென்றால் பாகுபலி முழுவதுமே முடிந்து விடுமாம், ஆனாலும் ஜூலை மாத செண்டிமெண்ட் காரணமாக படத்தை அடுத்த வருடம் ஜூலையில் தான் வெளியிட இருக்கிறாராம் ராஜமௌலி.
Post a Comment