பாபநாசம் படத்தை பட்டத்து யானை என்று வர்ணித்துள்ள விவேக், தனது பாலக்காட்டு மாதன் படத்தை கன்றுக் குட்டி என வர்ணித்து, ஆதரவு கேட்டுள்ளார்.
விவேக் நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படம் இன்று 150 அரங்குகளில் வெளியானது. இதே தேதியில் கமல் ஹாஸனின் பாபநாசம் 400 அரங்குகளில் வெளியாகியுள்ளது.
தாங்கள் வெளியீட்டுத் தேதியை அறிவித்து ஒரு மாதம் கழித்து திடீரென கமல் படத்தை அறிவித்து நெருக்கடி ஏற்படுத்தியதாகவும் ஆனாலும் படத்தை திட்டமிட்ட தேதியில்தான் வெளியிடுவோம் என்றும் விவேக் தரப்பில் கூறியிருந்தனர்.
உடனே கமலுக்கு போட்டியாக விவேக் என்று செய்திகள் கிளம்ப, கமலோடு நான் மோதவோ, போட்டி போடவோ இல்லை என்று விவேக் கூறினார்.
இந்த நிலையில் இன்று படம் வெளியானதும் அனைவருக்கும் விவேக் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்:
"நண்பர்களே! பாபநாசம் வரும் போதே பா.மாதவனும் வருகிறது. யானையின் கால்களுக்கு இடையில் ஒரு கன்றுக்குட்டி போல. இது துணிச்சல் தான். ஆனால் வேறு வழி இல்லை.
பண்டிகை நாட்களில் வரவேண்டிய பட்டத்து யானை திடீரென்று முன் அறிவிப்பின்றி வந்துவிட்டது. இருப்பினும், இது நாள்வரை கொடுத்த ஆதரவை இனியும் கொடுத்து கன்றுக்குட்டியையும் ஆதரிக்க வேண்டுகிறேன். - நடிகர் விவேக்."
-இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment