சென்னை: ஜெயம் ரவி -
சமூக அக்கறையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருக்கிறார், படத்தில் குற்றங்களைக் கண்டுபிடிப்பவராக ஜெயம் ரவியும் அந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிப்பவராக நயன்தாராவும் இணைந்து நடித்திருக்கின்றனர்.
ரோஜா நாயகன் அரவிந்த் சாமி படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தனி ஒருவன் படத்தின் டீசர் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜெயம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ராஜா ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கடும் எதிர்பார்ப்பு உள்ளது.
Post a Comment