கார்த்தி - துல்கர் - மணிரத்தினம் மற்றும் "கோமாளி"!

|

சென்னை: ஓ காதல் கண்மணி படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போன்று மீடியாக்களும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மணிரத்னம் படத்தைப் பற்றி நாள் தவறாது செய்திகள் வெளியிட்டு வந்தன.

முதலில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடிக்கிறார்கள் என்று செய்திகள் வந்தன, பின்பு கார்த்தியுடன் இணைந்து மம்முட்டி நடிக்கிறார் என்று கூறினார்கள். தற்போது இறுதியாக கார்த்தியுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Mani Ratnam's Next Movie Titled 'Komaali'?

கார்த்தியும், சல்மானும் இணைந்து நடிப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள், செப்டம்பரில் துவங்க இருக்கும் படத்தின் ஹீரோயின் சுருதிஹாசன் என்று கூறுகிறார்கள். இந்தப் படத்திற்காக கோமாளி என்னும் தலைப்பை தேர்வு செய்து இருக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம்.

வழக்கம் போல இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போவது ஏ.ஆர். ரஹ்மான் தானாம், கார்த்தி மற்றும் துல்கர் என 2 இளம் நடிகர்கள் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

 

Post a Comment