சென்னை: கமலின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த பாபநாசம் திரைப்படம், வசூலில் சாதனை படைத்திருகிறது. சமீப காலமாக தமிழ்ப் படங்கள் தடுமாறி வரும் வேளையில், எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி விட்டு வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பாபநாசம்.
தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் சேர்த்து சுமார் 750 திரை அரங்குகளில் படம் திரையிடப்பட்டிருந்தது, இதில் முதல் நாள் முடிவில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாரவிடுமுறை நாட்களான நேற்று(சனிக்கிழமை) மற்றும் இன்றைய வசூல் எவ்வளவு என்று நாளைக் காலையில் தான் தெரியவரும். இந்த இரு நாட்களின் வசூலும் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கமலின் நடிப்பில் ஆர்ப்பாட்டம் துளி கூட இன்றி வெளிவந்த பாபநாசம் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது, குடும்பக் கதைகளின் மதிப்பை இன்னும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த வெற்றி.
Post a Comment