சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கனவுக்கன்னிகளாக இருந்து மார்க்கெட் சரிந்து அம்மா நடிகைகளாகும் ஹீரோயின்களுக்கு மத்தியில் கவர்ச்சி நடிகை சோனா தான் பெரிய ஹீரோக்களுக்கு முக்கியமாக விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஆசைப்படுவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
"மிருகம்", "குசேலன்", "ரௌத்திரம்" ஆகிய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சோனாதான் இவர் கைவசம் தற்போது எந்த படங்களும் இல்லை. கவர்ச்சி நடிகையாக பல படங்களில் வலம்வந்த சோனா, கனிமொழி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று நடத்திய விழா ஒன்றில் பேசிய சோனா, விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏங்க இப்படி ஆசைப்படுகிறீங்க என்று கேட்டால், அப்போதுதானே அவரைக் கட்டிபிடித்து நடிக்க முடியும் என்றும் கேலியாக தெரிவித்துள்ளார் (தாய்மைக்கு இப்படி ஒரு புது அர்த்தமா.. வெளங்கும்)
இவரது விருப்பத்தை விஜய்யும், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களும் நிறைவேற்றுவார்களா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதுக்கும் பார்த்து யோசிச்சு செய்யுங்கப்பா எதைச் செய்தாலும்.
Post a Comment