சென்னை: தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
பென்சில் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பென்சில் வெளியாகாத நிலையில் அடுத்து வெளிவந்த, டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
டார்லிங் படத்தின் மூலம் வெற்றி ஹீரோவாக மாறிய ஜி.வி.பிரகாஷின் கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கின்றன, ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் இசை என்று பயங்கர பிஸியாக இருக்கிறார் ஜி.வி.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் தற்போது ரிலீசிற்குத் தயார் நிலையில் உள்ளது, அதை அடுத்து பாட்ஷா என்கிற ஆண்டனி, கெட்ட பய சார் இந்த கார்த்தி போன்ற படங்கள் ஜி.வி. பிரகாஷின் கைகளில் உள்ளது.
இத்தனை நாட்கள் காதல் மற்றும் திரில்லர் கலந்த படங்களில் நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.
ஆக்க்ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது.
எல்லாம் சரி, படத்தை யாரு பாக்குறது...
Post a Comment