பஞ்சாபில் தொடங்குகிறது சல்மானின் “சுல்தான்”

|

மும்பை: இந்தி உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான் , இவர் அடுத்து நடிக்கவுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு விரைவில் பஞ்சாபில் தொடங்கப்படவுள்ளது. இந்தி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் சுல்தான் படத்தை இயக்குகிறார்.

சுல்தான் படம் பஞ்சாபில் தொடங்கப் படவிருக்கிறது என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும், தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் அலி அப்பாஸ். சுல்தான் படத்தை தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

படத்தில் சல்மான் கான் ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க விருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் முன்னணி ஹீரோயின் ஒருவரைப் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன இதனைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

சுல்தான் படத்தின் படப்பிடிப்பை நவம்பரில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அலி அப்பாஸ், சுல்தான் படம் 2016 ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் சுல்தான் படம், அதே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கானின் ரயீஸ் படத்துடன் மோதவிருக்கிறது.

தற்போது சல்மான் நடிப்பில் வருகின்ற 18 ம் தேதி பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment