சென்னை: நேற்று முன்தினம் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் டீசருக்கு, ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஆர்யாவின் 25 வது படமான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் டீசர் ஜூலை 10 தேதி அன்று வெளியானது.
டீசர் முழுவதுமே ஆர்யாவும்,சந்தானமும் குடிப்பது போன்ற காட்சிகளே நிறைந்துள்ளன, இதனைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்புகளை வலுவாகப் பதிந்து வருகின்றனர்.
இயக்குநர் ராஜேஷின் அனைத்துப் படங்களிலும் குடிப்பது போன்ற காட்சிகளே அதிகம் இடம்பெறுகின்றன, இயக்குநர் ராஜேஷ் குடிப்பது போன்ற காட்சிகளை எப்போது தனது படங்களில் இருந்து நீக்கப் போகிறார் என்று கேள்வி என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் ஒருசிலர் தமிழ்நாட்டில் தற்போது பிஞ்சுக் குழந்தைகளையும் மது அருந்த வைக்கும் கொடூரங்கள் ஆங்காங்கே நடைபெறும் வேளையில், இதுபோன்ற காட்சிகளை வைப்பது அவசியமா? என்று கோபத்துடன் கேட்டுள்ளனர்.
இன்னும் சிலர் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க என்ற டைட்டிலை மாத்திவிட்டு, வாசுவும் சரவணனும் ஒண்ணாக் குடிக்கிறவங்க என்று டைட்டிலை வைக்குமாறு கிண்டல் செய்துள்ளனர்.
இதைப் போன்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டுள்ளதால் டீசருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இயக்குநர் ராஜேஷ் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்?
Post a Comment