மும்பை: இந்தியாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனையும், இயக்குநர் ராஜமவுலியும் அவர் தந்தை விஜயேந்திர பிரசாத்தும்தான் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்கள் போலும்.
எப்படி என்கிறீர்களா.. பாகுபலி திரைப்படத்தின் மகா வெற்றியும், அதன் வசூல் நிலவரமும் உங்களுக்கு தெரிந்ததே. அதற்கு கடும் போட்டி தரும் வகையில், பாலிவுட்டில் இப்போது ஒரு படம் பட்டையை கிளப்பி வருகிறது. சல்மான் கான் நடித்து கடந்த 17ம் தேதி வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படம்தான் அப்படி ஒரு புழுதி கிளப்பி வருகிறது.
இவ்விரு மெகா ஹிட் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு படங்களுக்குமே கதை எழுதியது ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இயக்குநர்கள்தான் வேறு. சல்மான் படங்களில் கதை என்று பெரிதாக ஒரு ஐட்டமே இருக்காது. ஆனால், இப்படத்தில் கதைதான் முக்கிய அம்சமாம். ரசிகர்கள் கொண்டாடுவதும் கதைக்காகத்தான். இதனால்தான் கதாசிரியர் விஜயேந்திராவும் கொண்டாடப்படுகிறார்.
தனது இரு கதைகளில் உருவான படங்களும் மோதிக்கொண்டு, வசூலில் கடும் போட்டிபோடுவதை அமைதியாக ரசித்து வருகிறார் விஜயேந்திரா.
Post a Comment