சென்னை: விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் பாடல்கள் சற்று நேரத்திற்கு முன்னால் வெளியானது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, கதை, வசனம் எழுதி நடித்திருக்கிறார்.
ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை சொந்தமாகத் தயாரித்து இருக்கும் விஜய் சேதுபதி, படத்தில் 55 வயது முதியவராக நடித்திருக்கிறார். பிஜு விஸ்வநாத் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து திலக், ஆறுமுகம் பாலா, ஆஷிர்தா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.
மொத்தம் 4பாடல்களில் இரண்டு பாடல்களை எழுதிப் பாடி இருக்கிறார் விஜய் சேதுபதி, மீதம் உள்ள 2 பாடல்களை ஜஸ்டின் பிரபாகரனும், கட்டளை ஜெயாவும் எழுதி உள்ளனர். விஜய் சேதுபதியுடன் இணைந்து கார்த்திக், நரேஷ் ஐயர், பத்மலதா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
ஒரே ஒரு ஊருல, ஸ்டிரைட்டா போயி என்ற 2 பாடல்களை எழுதி பாடி இருக்கிறார் விஜய் சேதுபதி, தீராத ஆசைகள் மற்றும் பயணங்கள் தொடருதே என்ற 2 பாடல்களை கார்த்தி,நரேஷ் ஐயர் மற்றும் பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடல்கள் நன்றாக இருப்பதாக மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment