வாலு ரிலீஸ் தள்ளிப்போன விரக்தியில் ரசிகர் தற்கொலை முயற்சி! உடைந்துவிட்டேன் என்கிறார் சிம்பு

|

சென்னை: வாலு திரைப்படம் ரிலீசாவது தள்ளிப்போனதால், சிலம்பரசன் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சிலம்பரசனே தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாலு திரைப்பட பிரச்சினை, ஹனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவழியாக நாளைக்காவது படம் ரிலீசாகும் என்றிருந்த நிலையில், வழக்கு காரணமாக, நீதிமன்ற உத்தரவால், மீண்டும் தள்ளிப்போயுள்ளது வாலு ரிலீஸ்.

இதனிடையே, சிலம்பரசன் டிவிட்டர் மூலம் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது டிவிட்டில் "ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி கேட்டு மனது உடைந்துவிட்டது. நான் கிட்டத்தட்ட கண்ணீர் மல்கவே உள்ளேன். ரசிகர்கள் தெம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மனதை தளர விடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

தனது மற்றொரு டிவிட்டில் "நான் ஏற்கனவே உடைந்துபோயுள்ளேன். என்னை உறுதியாக வைத்துக்கொள்ள முயன்று கொண்டுள்ளேன். இந்த நிலையில், இப்படி செய்யாதீர்கள். உங்கள் அன்பே எனக்கு போதும்" என்றும் கூறியுள்ளார் சிம்பு.

இதனிடையே, வாலு படம் ரிலீஸ் தள்ளிப்போவதும், அது தொடர்பான தற்கொலை முயற்சி போன்ற நிகழ்வுகளும், டிவிட்டர் நெட்டிசன்களால் கேலி செய்யப்படுகின்றன. அப்படி சில டிவிட்டுகளை இங்கே பாருங்க.

 

Post a Comment