ரோமியோ ஜூலியட் பெற்ற வெற்றியில், அதே டீமுடன் அடுத்த படம் பண்ணத் தயாராகிவிட்டார் ஜெயம் ரவி. ஆனால் இந்த முறை அவருடன் விஜய் சேதுபதியும் இணைகிறார்.
லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்து இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் ரோமியோ ஜூலியட். படக்குழுவே எதிர்ப்பார்க்காத வெற்றி கிடைத்தது.
படம் வெளியானதுமே, இயக்குநர் லஷ்மண் இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் நிச்சயம் கால்ஷீட் தருவேன் என்று ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இதில் ஜெயம் ரவி, விஜய் சேது இணைந்து நடிக்கின்றனர். அந்தப் படத்தை லஷ்மண் இயக்க, இமான் இசையமைக்கிறார். ‘ரோமியோ ஜூலியட்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தர்ராஜனே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகி, இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது.
Post a Comment