சென்னை: நல்ல தமிழ்ப் படங்கள் வந்தால் ரசிகர்கள் பிறமொழிப் படங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாபநாசம் திரைப்படம்.
இந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் சென்னையில் வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது.
பாபநாசம் வெளியான அன்று அர்னால்டின் நடிப்பில் ஹாலிவுட் படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸும் சென்னையில் வெளியாகியது, டெர்மினேட்டர் ஜெனிசிஸ் உலகம் முழுதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கியும் இன்னமும் பாபநாசம் மீதுள்ள மோகம் மக்களிடம் துளிக்கூட குறையவில்லை, இதனால் பிறமொழிப் படங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி தொடர்ந்து வசூலில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது பாபநாசம்.
பாபநாசத்தின் அலையில் தற்போது சென்னையில் தொடர்ந்து தடுமாறி வருகிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ், இதுவரை சென்னையில் மட்டும் 1.34 கோடியை வசூலித்து இருக்கிறது பாபநாசம்.
ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது, சரியான தமிழ்ப்படங்கள் எதுவும் அந்த நேரத்தில் வெளியாகவில்லை. அதே போன்று நாமும் வசூலைக் குவித்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு டெர்மினேட்டர் ஜெனிசிசை தமிழ்நாட்டில் வாங்கி வெளியிட்டவர்கள், கண்டிப்பாக இந்த வசூலை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
Post a Comment