பாகுபலி படத்தின் கதை, அமரர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் சாயலில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறோம் என்றார் பாகுபலி நாயகன் பிரபாஸ்.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களை அழைத்து பகிர்ந்து கொண்டனர் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமிழில் வெளியிட்ட ஞானவேல் ராஜா ஆகியோர்.
அப்போது பாகுபலி படத்தின் கதை அப்படியே எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதை போலவே உள்ளதே? அடிமைப் பெண் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று பிரபாஸிடம் கேட்கப்பட்டது.
அடிமைப் பெண் படத்தைப் பார்க்கவில்லை என்று பிரபாஸ் கூறினார்.
பக்கத்திலிருந்த ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டபோது, அடிமைப் பெண் படத்தைத் தான் பார்த்திருப்பதாகவும், பாகுபலி கதை அந்த சாயலில் இருந்ததை உணர்ந்ததாகவும் கூறினார்.
பின்னர் பிரபாஸ் பேசுகையில், "எம்ஜிஆர் மிகப் பெரிய சாதனையாளர். பாகுபலி கதை அவரது அடிமைப் பெண் சாயலில் அமைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறோம்," என்றார்.
Post a Comment