சென்னை: சிம்பு நடித்துள்ள
இந்த 2015 ம் ஆண்டு சிம்பு நடித்த படங்களில் எதுவும் வெளிவராதா என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, சிம்புவின் நடிப்பில் வாலு திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப் பட்டது.
படம் வெளிவர இருந்த நேரத்தில் இடையில் புகுந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கொன்றைப் போட, படம் தடைபட்டு நின்றது.
வாலு வெளியாகாத வருத்தத்தில் ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட கிளப்பிவிட்டார்கள்.
இந்த நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் இன்னும் 3 வாரத்துக்குள் படம் கண்டிப்பாக வெளியாகி விடும் என்று கூறுகிறார்கள்.
தேதி அறிவித்தால் கூட படம் வெளியாவதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் அல்லவா... அதனால் வெளியான பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும், வாலு விஷயத்தில்!
Post a Comment