சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இருக்கும் நடிகர் யாரென்று கேட்டால், நிச்சயமாகக் கமலைக் கைகாட்டலாம். அந்த அளவிற்கு சூறாவளி வேகத்தில் தன் படங்களை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறார் கமல்.
உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் இந்த மூன்று படங்களில் உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் என 2 படங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன, பாபநாசம் தற்போது திரைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பாபநாசம் படத்தை வெறும் 39 நாட்களில் நடித்து முடித்த கமல், தற்போது அடுத்த படமான தூங்காவனத்தையும் முடிக்கப் போகிறார். வெறும் இரண்டே மாதங்களில் தமிழ்,தெலுங்கு என 2 மொழிகளிலும் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் கமல்.
இந்த வேகம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்த என்ன காரணம் என்று நெருங்கி விசாரித்ததில், கமல் அடுத்து ஒரு மிகப்பெரிய படத்தைக் கையில் எடுக்கப் போகிறாராம். கண்டிப்பாக அந்தப் படம் 2 வருடங்கள் இழுத்து விடும் எனவே அந்த இடைவெளியைச் சமாளிக்கத்தான் இந்த ஓட்டம் என்கிறார்கள்.
உலகநாயகன்னு சும்மாவா சொன்னாங்க....
Post a Comment