சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ஊரே பற்றி எரிந்து கொண்டிருக்க, இதுபற்றி ரஜினி, கமல், அஜீத் மற்றும் விஜய் போன்ற பிரபலமான நடிகர்கள் எந்தக் கருத்தும் கூறாமல் இதுவரை அமைதி காத்து வந்தனர்.
இந்நிலையில் முதல்முறையாக நடிகர் சங்கத் தேர்தல் பற்றிய பிரச்சினையில், மௌனத்தைக் கலைத்து வாய் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
நேற்று நடந்த பாபநாசம் திரைப்பட விழாவில் பத்திரிக்கையாளர்கள் நடிகர் சங்கப் பிரச்சினையில் இதுவரை பிரபல நடிகர்கள் யாரும் வாய்திறக்கவில்லையே என்று கேள்வி கேட்டனர்.
ஆனால் மேடையில் கமலின் அருகில் இருந்தவர்கள் இது பாபநாசம் வெற்றிவிழா இங்கு இதைப் பற்றிக் கேட்க வேண்டாம், இந்தக் கேள்விக்கு கமல் வேறொரு சமயத்தில் பதிலளிப்பார் என்று கூறினர்.
கமலும் சற்றுத் தயங்கினார், ஆனால் ஒரு நிமிட அமைதியின் பின்பு மீண்டும் அதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கமலிடம் கேட்டனர்.
இந்த முறை சற்றும் தயங்காமல் பதிலளித்த கமல், "நடிகர் சங்கப் பிரச்சினை குறித்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை அறிவுரை கேட்டால் கண்டிப்பாக சொல்லத் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார்.
சம்பந்தப்பட்டவர்கள் உலகநாயகனை அணுகுவார்களா, பொறுத்திருந்து பார்க்கலாம்.
Post a Comment