சிவா இயக்கி வரும் அஜீத் படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் ஸ்ருதி ஹாஸன். முதலில் இருவரும் அஜீத்தும் ஸ்ருதியும் கால் டாக்சி டிரைவர்களாக நடிப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் ஸ்ருதி ஹாஸன் வக்கீல் வேடத்தில் தோன்றும் படம் ஒன்று நாளிதழில் வெளியாக, அவரது உண்மையான வேடம் அம்பலமானது.
இன்னும் பெயரிடப்படாத அல்லது பெயரை ரகசியமாக வைத்திருக்கும் இதன் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
அங்குதான் ஸ்ருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குநர் சிவா படமாக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன் வக்கீல் உடையில் ஓடுவது போன்ற காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தினசரியில் வெளியாகி, இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.
இந்தப் படத்தில் லட்சுமி மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வில்லனாக கபீர் சிங் நடித்துள்ளார். ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
Post a Comment