தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் புதிய அறக்கட்டளையை நடிகர் கமல் ஹாஸன் தொடங்கி வைக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இயக்குநர் பாலச்சந்தர் உடல் நலக் குறைவால் மறைந்தார். வரும் ஜூலை 9-ம் தேதி அவரது பிறந்த தினமாகும். அன்றைய தினத்திலேயே அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளது.
அன்றைய தினம் காலையில் பாலச்சந்தர் கடைசியாக நடித்த உத்தம வில்லன் படம் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.
மாலை 6 மணி அளவில் கே.பியைப் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதி, ரமேஷ் விநாயகம் இசையமைத்த பிரத்யேகப் பாடல் ஒன்று வெளியிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, கே.பாலசந்தர் அறக்கட்டளையை கமல்ஹாசன் தொடஹ்கி வைக்கிறார்.
Post a Comment