ட்விட்டரில் பாகுபலி ஒளிப்பதிவாளர் செந்தில் குமார்... வரவேற்றார் இயக்குநர் ராஜமவுலி!

|

பாகுபலி.. இந்திய சினிமாவே இன்று இந்தப் படம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று பிரமாதமான ஒளிப்பதிவு. படம் பார்த்த அத்தனை பேரும் கேட்பது, இந்த அருவி எங்கே இருக்கிறது? இப்படி ஒரு லொகேஷன் இந்தியாவில் இருக்கிறதா? என்றுதான்.

இப்படியெல்லாம் கேட்க வைத்தவர் கேகே செந்தில் குமார். படத்தின் ஒளிப்பதிவாளர். ராஜமவுலியுடன் 6 மெகா ஹிட் படங்களில் பணியாற்றியவர். ஆந்திராவில் செட்டிலான தமிழர். தந்தை பெயர் கிருஷ்ண மூர்த்தி.

Rajamouli welcomes his DOP to twitter

செந்தில்குமார் இதுவரை 13 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க தெலுங்குப் படங்கள்தான். இவற்றில் 6 படங்கள் ராஜமவுலி இயக்கியவை. சை படத்தில்தான் இருவரும் இணைந்தனர்.

பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்கும் செந்தில்குமார்தான் ஒளிப்பதிவு.

பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் செந்தில்குமார், இப்போது ட்விட்டரிலும் இணைந்துள்ளார். கடந்த 13-ம் தேதி ட்விட்டரில் இணைந்த அவர், இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, ரிஷி கபூர், கரண் ஜோஹர் போன்ற பாலிவுட் பிரபலங்களின் பாராட்டுகள் போன்றவற்றை ட்விட்டரில் ரீட்வீட் செய்து நன்றி கூறியுள்ளார்.

ட்விட்டரில் இணைந்த செந்தில் குமாரை இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி வரவேற்றுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "செந்தில் குமாருக்கு இதயப் பூர்வ வரவேற்பு. மிகத் திறமையான, பொறுமையான ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு மற்றும் படங்கள் பற்றி கேள்விகள் தொடரும்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment