கமல் நடித்த பாபநாசம் படத்தோடு வெளியான விவேக்கின் பாலக்காட்டு மாதவன் கோடம்பாக்க வழக்கில் சொன்னால், 'தப்பிச்சுடுச்சி'. வார நாட்களான நேற்றும் இன்றும் கூட நல்ல வசூலுடன் தொடர்வதால், விவேக் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்!
வெள்ளிக்கிழமை 150 அரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படம் இப்போது மேலும் சில அரங்குகளில் கூடுதலாக திரையிடப்படுகிறது.
படம் முழுக்க நகைச்சுவையும் அம்மா சென்டிமென்டும் இப்பதால் குடும்பத்தோடு இந்தப் படத்தைப் பார்க்கிறார்களாம்.
நெல்லையில் உள்ள அருணகிரி திரையரங்கில் தொடர்ந்து மூன்று காட்சிகள் பெண்கள் மட்டுமே வந்து இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர். மூன்று காட்சிகளும் ஹவுல்புல்.
அந்தப் பகுதியில் விவேக் லட்சக் கணக்கில் கிராமம் கிராமமாக மரம் நட்டதன் பலன் இது. இதுவரை பல ஊர்களில் 27 லட்சத்துக்கும் அதிகமாக மரங்கள் நட்டுள்ளார் விவேக். அந்தந்தப் பகுதி மக்கள் ஆவலுடன் பாலக்காட்டு மாதவனைப் பார்க்கிறார்களாம்.
திங்கள், செவ்வாய்தான் ஒரு படத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படும் முக்கிய நாள். இந்த இரு தினங்களிலும் பாலக்காட்டு மாதவன் வசூல் 40 சதவீதம் கூடியிருப்பதாக தயாரிப்பாளர் லாரன்ஸ் சந்தோஷத்துடன் சொல்கிறார். அப்புறமென்ன விவேக் சார்.. சக்ஸஸ் பார்ட்டி எப்போ?
Post a Comment